Sunday 9 November 2008

<தாயை விட... >

நேரம் நண்பகல் 12.00 மணியை கடந்திருந்தது. பக்கத்து தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து அப்பாவுக்கு அழைப்பு வந்தது.''மகள் கதைக்கட்டாம்... "அப்பா தொலைபேசி எடுக்க ஓடோடிப் போனார். அப்பாவுக்காகவே காத்திருந்தவள் போல, அப்பா எடுத்ததும் அவள் கதைத்தாள்.''வழமையான நலஉசாவல்..." தம்பி, தங்கச்சியின் படிப்பு பற்றிய கேள்விகள்...." எல்லாம் முடிய, ''நான் வேற இடம் போறனப்பா.... அதுதான் எடுத்தனான்....,இனி எடுத்தால் தான் தொடர்பு....நீங்கள் எடுக்காதீங்கோ....சரி வைக்கிறன் அப்பா...."மகளோடு பேசிய நிறைவோடு அப்பா வந்தார். அம்மா இல்லாமல் போனதிலிருந்து அவளுக்கு எல்லாமே அப்பாதான். -------------------------


ஒரு முறை அவள் வீட்டுக்கு வந்து போனபோது அவளது உடமைப்பையிலிருந்த கடிதமும், படமும் அவள் யார் என்பதைப் பெற்றவரும் உடன் பிறப்புகளும் அறிந்து கொண்டார்கள். ''அவளது உணர்வுகள் மதிப்பளிக்க வேண்டும்" அப்பா உடன் பிறந்தோரை மதிப்பளிக்க வேண்டும்" அப்பா உடன் பிறந்தோரை அமைதிப்படுத்தினார். அதன் பின் நிறையக் களங்களில் பங்கெடுத்திருக்கிறாள். கடமை அழைக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் அவள் போய் வந்தாள். ஆனால், எங்கு நிற்கின்றாளோ அங்கிருந்து எப்படியாவது வீட்டோடு தொடர்பை ஏற்படுத்திவிடுவாள். இது அவளின் அன்பின் வெளிப்பாடு. அதே போல்தான், இன்றும் தான் வேறிடம் செல்வவதாக குறிப்பிட்டிருந்தாள். அப்பா, அதை பெரிதாக எடுக்கவில்லை. மீண்டும் மகள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது.

அன்று மாலை இரு போராளிகள் அப்பாவைத் தேடி வந்தார்கள். அப்பாவிடம் அந்தச் செய்தியைச் சொன்னார்கள். அப்பா நம்ப மறுத்தார். ''இன்று நண்பகல் நான் பிள்ளையோடு கதைத்தேன்... அவள் வேறிடம் போவதாக சொன்னாள்..." ஓமய்யா.... கதைத்திருப்பா... ஏனெண்டா மாலைல 3.30 ற்குத்தான் திருகோணமலைக் கடற்பரப்பில் அந்தக் கரும்புலித்தாக்குதல் நடந்தது..." ''தாக்குதலுக்கு அணியப்படுத்தி படகுகள் எல்லாம் கடலுக்கு இறங்கின பிறகுதான் உங்களோட மகள் கதைச்சிருக்கிறா..."வந்தவர்கள் சொன்னார்கள்அப்போதுதான் அப்பாவுக்கு ஓர் உண்மை புரிந்தது.
''தன் குடும்பத்தை காதலிப்பவளால்தான, தாய் தேசத்தின் மீது அன்பு வைக்க முடியும்"
******
_________
நன்றி
பதிவு.கொம்

<தக்க நேரத்தில்... >

ஓயாத அலைகள் 03 சூடுபிடித்து நகர்ந்து கொண்டிருந்த நேரம். ஆனையிறவுப் பெருந்தளத்தை அழிப்பதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நாட்களில் ஒருநாள் 30-12-1999ம் அன்று கிளாலியிலிருந்து ஆனையிறவை நோக்கி எதிரியின் 3 நீருந்து விசைப்படகுகள், 4 கூவக் கிறாப,; 7,8 புளுஸ்ரார் என்பன நகர்ந்து கொண்டிருந்தன.இந்த எதிரியின் நகர்வை முறியடிக்க, கடற்புலிகளின் சிறிய ரகப் படகுகள் இரண்டுடன் ஒரு கரும்புலி படகும் அணியமாகியது.

இந்நிலையில் கடற்புலிகள் எதிரியின் கலன்களை வழிமறித்து தாக்குதல் செய்ய கரும்புலிப் படகின் பொறி சீராக இயங்க மறுத்ததால், பெரும் இக்கட்டான சூழல் ஒன்று உருவாகின்றது. இந்த நிலைக் கிளாலிக் கரையில், நின்று அவதானித்த அறிவரசன் புரிந்து கொண்டான். எந்தக் கட்டளையும் இன்றி உடனடியாகவே அவன் முடிவெடுத்தான். ''அந்த இடத்திற்கு தான் விரைவாகச் செல்ல வேண்டும்'' அதற்காக அவன் தனது படகை இறக்க வேண்டும். உதவிக்கோ யாரும் இல்லை. தனிமனிதனாக நின்ற அவனை உடல் நிலையோ படுமோசம். வயிற்றில் விழுப்புண் பட்டு சரியாக நிமிந்து நடக்க முடியாத நிலை. வயிற்றில் விழுப்புண் பட்டதால். சோறோ, பிட்டோ கடினமான உணவை உட்கொள்ள அவனால் முடியாது. நேரத்திற்கு நேரம் அவனால் சாப்பிடவும் முடியாது. இப்படியான நிலையில் இருந்த அவன். சந்தர்ப்பதை நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

இந்நிலையில் கிளாலியில் வற்றிய பகுதியில் நின்ற தனது கரும்புலிப் படகை தன்னந்தனியாகத் தள்ளி கடலுக்குள் இறக்கி, கொக்குப்பிட்டியில் நின்ற கட்டளைத் தளபதி பகலவனிடம் விரைந்து சென்று, '' நான் இடிக்கட்டா '' எனக் கேட்டு அனுமதியினைப் பெற்றுக்கொண்டு எந்தத் தொலைத் தொடர்பு கருவியும் இன்றி கையிலே இலக்கைச் சுட்டிக்காட்ட மிக விரைவாகச் சென்று இடித்த அறிவரசனின் தாக்குதலின் பின் மூன்று நீருந்து விசைப்படகுகள் - நான்கு கூவக் கிறாப் என்பன அந்த இடத்தில் இருக்கவே இல்லை.
****
_________
நன்றி
பதிவு.கொம்

<என் பாசமிரு தங்கைக்கு உன் அண்ணனின் இறுதி மடல் இது>

என் பாசமிரு தங்கைக்கு உன் அண்ணனின் இறுதி மடல் இது.

ஜெயமலர், நான் கரும்புலியாகச் சென்று வீரச்சாவடைந்தயிட்டு கவலைப்படக்கூடாது. ஏனெனில் நாம் இருவரும் ஒரு வரலாற்றுத் தலைவனின் வழி காட்டலில் நிற்கின்றோம். இழப்புக்கள் எமக்கு புதியவை இல்லை.இழப்புக்கள் இல்லாது எம் தமிழீழத்தை வென்று எடுக்க முடியாது என்பதை நீ படித்திருப்பாய்.

மற்றும் நீ எனது பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும்.நீ இயக்கத்தை விட்டு விலகக்கூடாது இதுதான் நீ செய்யும் ஆத்மா சாந்தியாகும்.

இப்படிக்கு,
தணிகைமாறன்,
(அன்ரன் பெனடிற்).

__________
நன்றி
பதிவு.கொம்

<டாக்கியினுள் குண்டுடன் பாய்ந்தான் அன்பழகன்>

அரசு, படைகளை எம் நிலைகள் நோக்கி ஏவிவிட, எம்மிடம் அடிவேண்டிய படைகள் முன்னேறவும் முடியாமற் பின்வாங்கவும் முடியாமல் திண்டாடின. அரசியல் தேவைக்காக எப்படியாவது ஒரு வெற்றியைப் பெற்றுவிட மீண்டும் மீண்டு;ம் முயன்றனர்.

20, சித்திரை, 1998 ஆம் நாட் காலைப்பொழுது எதிரி மிகவும் பலமாயிருந்தான். தன்னிடமிருந்த வளங்கள் அனைத்தையும் ஒன்றுசேர்த்திருந்தான். நாம் பழைய நிலையிலே இருந்தோம்.

எதிரி எப்படியும் மாங்குளத்தை அன்று பிடித்துவிட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். அதற்காக ஒலுமடுப் பகுதியூடாகவும் கனகராயன் ஆற்றுப்பகுதியாலும் மூன்று முறிப்பாலும் சண்டையைத் தொடக்கியிருந்தான். எம் போராளிகள் சிலரின் சாவே அவனது இலக்கை எட்டும் நிலையை ஏற்படுத்தப் போதுமானதாகவிருந்தது.

எமது போராளிகள் சிலரே காவலில் நின்ற அக் காவலரண் தொடரின் ஒரு பகுதியை நோக்கி, ஒன்றல்ல இரண்டல்ல பல ராங்கிகள் அணிவகுத்து முன்னேறின. முன்னேறுவது பின்னர் தரித்து நின்று எம் நிலைகள் மீது அடிப்பது. பின் முன்னேறுவது என எதிரி ராங்கிகள் முன்னேறிக்கொணடிருந்தன.

எம்மிடம் இருந்ததோ சாதாரண துப்பாக்கிகள். நாம் சுடச்சுட எதிரி முன்னேறினான். எம்மவர் இயன்றவரை சுட்டனர். சுட்ட ரவைகள் எல்லாம் எதிரியின் உருக்கு இயந்திரங்களிற் பட்டுச்சிதறி விழுந்ததைத் தவிரப் பயன் ஏதும் ஏற்படவில்லை.

நவீன கவச எதிர்ப்பு ஆயுதங்கள் அன்று அவ்விடத்தில் எம்மிடம் இருக்கவில்லை. எம்மால் ராங்கிகள் மீதான எதிர்ப்பை காட்டமுடியாத அவலநிலை. எம்மிற் பலரின் உயிர்களைக் குடித்துவிட்டு ராங்கிகள் சில எமது காவலரண்கள் மீதும ஏறிவிட்டன.

எல்லாம் முடிந்த நிலை. எஞ்சிய போராளிகள் சிலர் மட்டுமே காவலரணில் நின்றனர். இப்போது அந்தச் சண்டையைத் தீர்மானிக்கும் பொறுப்பு அங்கே எஞ்சி நின்ற சிலர் மேலேயே. அவர்களின் முடிவே அன்றைய சண்டையின் முடிவு. நாளைய சமரின் முடிவு. காவலரணில் ஏறிவிட்ட ராங்கியை ஏதாவது செய்தாக வேண்டும். எண்ணிக்கையில் நாம் குறைந்திருந்தோம். எதிரி வருவது உருக்கு இயந்திரங்களில்.

எமது காப்பரண் வேலியை உடைத்து அதனூடாக எதில் நகர்வது., ஜயசிக்குறுய் போரில் எதிரியைத் தடுப்பதற்கான எமது ஒரு வருட உழைப்பை வீணாக்கிவிடும். எதிரியின் ஜயசிக்குறு கனவு பலித்துவிடும். ஜயசிக்குறு நடவடிக்கையை முறியடிப்பதற்காக எமது போராளிகளின் உயிரைக் கொடுத்து நாம் செய்த ஈகமும் துன்பங்களும் அர்த்தமற்றவையாகிவிடும். இத்தனையையும் சாதித்துவிட முயன்றது எதிரியின் ராங்கிப்படையின் நகர்வு. அன்று எம்மிடம் ராங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் இல்லாமையே எதிரிக்கு வாய்ப்பை கொடுத்தது. எப்படி விட முடியும். எமது காப்பரண்கள் இரத்தமும் சதையுமாகிவிட்டன. அவற்றை எப்படி எதிரியிடம் விடமுடியும். விடுவோமாயின் முடிவு வார்த்ததைகளால் வர்ணிக்க முடியாததாகி விடுமென்பதை எஞ்சி நின்றவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். வரப்போகும் சிக்கலைத் தன் போர்ப் பட்டறிவின் மூலம் நன்கு உணர்ந்தான் அன்பழகன். எல்லாவற்றுக்கும் மேலாக அப்போது தனக்கிருந்த கடமையை அறிந்தான்.

தன்னில் தங்கி ஒரு சண்டையை, சண்டையின் முடிவை சண்டையின் முடிவால் தான் நேசித்த மக்களுக்கு ஏற்படப்போகும் தாக்கத்தை நன்கு விளங்கிக் கொண்டான். இறுதித் தீர்மானமொன்றை எடுத்தான். தன் உயிராற் கூடியபட்சம் செய்யக் கூடியதைச் செய்ய முடிவெடுத்தான். தன் தேசத்திற்காகத் தன்னால் உயர்ந்தபட்சம் எதைச் சாதிக்க முடியுமோ அதைச் சாதித்தான்.

காப்பரணுக்கு மேலே ஏறிய ராங்கி ஒன்றினுட் குண்டுடன் பாய்ந்தான் அன்பழகன். எதிரியின் ராங்கி குண்டினால் வெடித்த போது அவன் அங்கு நின்ற போராளிகளின் நெஞ்சில் நிறைந்தான். அவன் தன் தேசத்திற்காகச் செய்ய வேண்டியதை உணர்ந்தேயிருந்தான். உறுதியான புலிவீரன் என்பதை எண்பித்தான் என்று அவனது தளபதிகள் புகழாரம் சூட்டினர்.

அன்பழகன் எடுத்த புலிகளுக்கேயுரிய தனித்துவமான அந்த வீர முடிவு அன்றைய சண்டையின் முடிவை மாற்றியது. ராங்கிகள் நுழைந்த சொற்ப நேரத்தில் அந்தப் பகுதி எதிரிகளாற் கைப்பற்றப்பட இருந்த அபாயத்தை நீக்கியது அவனின் வீரச்செயல். தலைவனின் சத்தியத்திற்காகத் துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப்பிரவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும் என்ற கூற்றை எண்பித்தான் அந்தப் போராளி.

எம்மால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்ட எதிரியின் ஜயசிக்குறு சமரும் அதனால் இன்று வெற்றிகரமாகத் தொடரும். புலிகளின் „ ஓயாத அலைகள் " சமர்களும் எம் போராட்டத்தின் புதிய அத்தியாயங்களெனின் அதில் அவன் ஒரு முக்கிய பக்கம்.
******

__________
நன்றி
பதிவு.கொம்